.webp)
-559066.jpg)
Colombo (News 1st) கைது செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக் துபாயில் ஹெலிகொப்டர் செலுத்த பயிற்சி பெற்றுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
ஷிரான் பாசிக்கிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் அவருக்கு சொந்தமான சொத்துக்கள் தொடர்பில் தகவல்கள் வௌிக்கொணரப்பட்டுள்ளன.
கொழும்பு - மெரின் ட்ரைவ் வீதியிலுள்ள 5 ஹோட்டல்கள் அவருக்கு சொந்தமானதென ஷிரான் பாசிக் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இந்தநிலையில், சந்தேகநபருக்கு சொந்தமான சொத்துக்கள் தொடர்பிலும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான விசாரணைகளை கொழும்பு மத்திய குற்ற விசாரணை பணியகம் முன்னெடுத்து வருகிறது.
இந்நிலையில், சந்தேகநபரை 72 மணித்தியாலங்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரணைக்குட்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
