.webp)
-558997.jpg)
Colombo (News 1st) இந்தியாவின் 80 ஆவது சுதந்திர தினம் இன்றாகும்.
இலங்கையை போன்றே பிரித்தானியாவின் காலனித்துவ ஆட்சியின் கீழ் இருந்த இந்தியா 1947 ஆகஸ்ட் 15ஆம் திகதி சுதந்திரமடைந்தது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு தலைநகர் டெல்லியிலுள்ள வரலாற்று சிறப்புமிக்க செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி நாட்டு மக்களுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி விசேட உரையாற்றவுள்ளார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு நேற்றிரவு நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றினார்.
அனைத்து குடிமக்களும் தங்கள் இலட்சியங்களை பூர்த்தி செய்வதற்கான வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வதையும், உலகின் முதன்மையான நாடாக இந்தியாவை முன்னேற்றும் இலக்கை நோக்கி பணியாற்றுவதையும் உறுதி செய்வதே சுதந்திர தினத்தின் நோக்கமென அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.
புதுடெல்லியில் இன்று (15) நடைபெறவுள்ள சுதந்திர தின விழாவில் இராணுவ அணிவகுப்பு நடைபெறவுள்ளது.
இந்திய வரலாற்றில் முதல் முறையாக வரலாற்று சிறப்புமிக்க செங்கோட்டையில் சுதந்திர தின நிகழ்வில் வந்தே மாதரம் பாடல் இசைக்கப்படவுள்ளது.
விழாவில் 5,000 பேர் நாடு முழுவதிலும் இருந்து விசேட அதிதிகளாக அழைக்கப்பட்டுள்ளனர்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு தலைநகர் புதுடெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
