.webp)
-558926.jpg)
Colombo (News 1st) மித்தெனிய, உல்ஹிட்டியாவ பிரதேசத்தில் 'பெக்கோ சமன்' என்பவரின் தாயார் மீது துப்பாக்கிச்சூடு மேற்கொண்டு சந்தேகநபர்கள் தப்பிச் சென்றதாகக் கூறப்படும் மோட்டார் சைக்கிள் மாத்தறை, ஊருபொக்க, தம்பஹல பிரதேசத்தில் உள்ள தேயிலை தோட்டமொன்றின் அருகில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச்சூடு நடத்திய சந்தேகநபர்கள் மோட்டார் சைக்கிளிலேயே தப்பிச்சென்றிருக்கலாம் என சந்தேகிப்பதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் 05 பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக அப்பகுதிக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
நேற்று பிற்பகல் 6 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரே இவ்வாறு துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த 'பெக்கோ சமன்' என்பவரின் தாய் மித்தெனிய பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போதே அவர் உயிரிழந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுக்களுக்கு இடையிலான மோதலின் விளைவாகவே இந்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
