.webp)
-558925.jpg)
Colombo (News 1st) இலங்கை மற்றும் வியட்நாம் இடையில் முதல் தடவையாக நேரடி விமான சேவைகளை இம்மாதம் முதல் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வியட்நாமுக்கு சொந்தமான 02 விமான சேவைகளின் ஊடாக விமான பயணங்களை முன்னெடுக்கவுள்ளதாக விமான நிலைய முகாமைத்துவ பிரிவின் பிரதானி, அருண ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
கட்டுநாயக்க மற்றும் வியட்நாமின் Ho Chi Minh நகருக்கு இடையில் விமான சேவைகளை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, வியட்நாம் எயார்லைன்ஸ் விமான சேவையின் ஊடாக எதிர்வரும் 16ஆம் திகதி முதல் விமான சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
எதிர்வரும் 18ஆம் திகதி முதல் வியட்ஜெட் விமான சேவையும் அதன் பயண சேவைகளை ஆரம்பிக்கவுள்ளது.
இவ்விரு விமான சேவைகளும் ஆரம்ப கட்டத்தில் வாரத்திற்கு தலா 03 விமானப் பயணங்களை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக அருண ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
இந்த விமான சேவைகள், நாட்டின் சுற்றுலா மற்றும் வர்த்தகத்துறையை மேம்படுத்துவதில் வலுவானவொரு காரணியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
