இன்று முதல் பசியட்ஸ் (Perseid) விண்கல் பொழிவு

இன்று முதல் பசியட்ஸ் (Perseid) விண்கல் பொழிவை காண சந்தர்ப்பம்

by Staff Writer 12-08-2026 | 3:31 PM

Colombo (News 1st) பசியட்ஸ் (Perseid) விண்கல் பொழிவை காண்பதற்கான சந்தர்ப்பம் நாட்டு மக்களுக்கு இன்று (12) முதல் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை கிட்டியுள்ளது. 

இதன் உச்சக்கட்டம் இன்று (12) அதிகாலை உருவானதாக வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 

நாளை (13) அதிகாலையிலும் வடகிழக்கு வானத்தை உன்னிப்பாகக் கவனிக்கும் ஒருவரால் இந்த விண்கல் பொழிவைக் காண முடியும். 

பசியட்ஸ் விண்கல் பொழிவு என்பது 1862 ஆம் ஆண்டு கண்டறியப்பட்ட ஒவ்வொரு 133 ஆண்டுகளுக்கு ஒருமுறை சூரியனை சுற்றி வரும் 26 கிலோமீற்றர் அகலமான வால்வெள்ளியின் பாகங்களாகும். 

இந்த முறை விண்கல் பொழிவு உச்சமடையும் நாள் அமாவாசை தினத்தில் ஏற்பட்டுள்ளதால் இருண்ட வானத்தில் மிக தௌிவாக அவதானிக்கக்கூடிய சந்தர்ப்பம் கிட்டியுள்ளது. 

தெளிவான வானில் ஒரு மணித்தியாலத்திற்கு 100 விண்கற்கள் வரை காண முடியும் என வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.