.webp)
-558784.jpg)
Colombo (News 1st) கொலம்பியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நில அதிர்வைையடுத்து தேசிய அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
நிலஅதிர்வில் சிக்கி இதுவரை 111 பேர் பலியாகியுள்ளதுடன் 87 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கொலம்பியாவின் சொக்கோ மாநிலத்தில் நேற்று (10) 7.4 மெக்னிடியூட் அளவில் நிலஅதிர்வு பதிவானதாக கொலம்பியாவின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலஅதிர்வின் தாக்கம் நாட்டின் பல பகுதிகளில் உணரப்பட்டுள்ளதுடன் சொக்கோ பகுதியில் சுமார் 65 கட்டடங்களுக்கும் கெலி நகரில் 32 கட்டடங்களுக்கும் சேதமேற்பட்டுள்ளது. சில பகுதிகளுக்கு பிரத்தியேகமாக இன்று (11) மாலை 05 மணி வரை ஊரடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
1500-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன.
கொலம்பியாவில் பதிவான இந்த நிலஅதிர்வையடுத்து அயல் நாடுகளான வெனிசுவேலா, ஈக்வடோர் மற்றும் பனாமாவிலும் நிலஅதிர்வுகள் உணரப்பட்டுள்ளன.
வெனிசுவேலாவின் வட பகுதியை பேரழிவுக்குள்ளாக்கி 6,300க்கும் மேற்பட்ட உயிர்களை காவுகொண்ட இரட்டை நிலஅதிர்வுகள் ஏற்பட்ட 2 மாதங்களுக்குள் இந்த நிலஅதிர்வு பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
