வாட்ஸ்அப், மெசெஞ்சர் ஊடாக கப்பம் பெறும் நபர்கள்..

வாட்ஸ்அப், மெசெஞ்சர் ஊடாக கப்பம் பெறும் நபர்கள் - இலங்கை கணினி நடவடிக்கை பிரிவு தகவல்

by Staff Writer 09-08-2026 | 3:09 PM

Colombo (News 1st) வாட்ஸ்அப் மற்றும் மெசெஞ்சர் போன்ற சமூக ஊடகங்கள் ஊடாக கப்பம் பெறும் சம்பவங்கள் பதிவாகி வருவதாக இலங்கை கணினி நடவடிக்கை பிரிவு தெரிவித்துள்ளது.

நபர்களை ஏமாற்றி காணொளிகளைப் பெற்று, அவற்றை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக அச்சுறுத்தி கப்பம் பெற்றுக்கொள்வதாக இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல தெரிவித்தார்.

அவ்வாறான அறியப்படாத நபர்கள் அனுப்பும் தகவல்களுக்கு பதிலளிப்பதை தவிர்ந்திருக்குமாறு அவர் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

மோசடிகளுக்கு இலக்காகியிருந்தால், உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யுமாறு இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல கூறினார்.