பாடசாலை கற்றல் செயற்பாடுகளும் பரீட்சை திகதிகளும்

புலமைப்பரிசில் மற்றும் உயர்தரப் பரீட்சைகள் தொடர்பான கல்வி அமைச்சின் அறிவிப்பு

by Staff Writer 07-08-2026 | 6:40 AM

Colombo (News 1st) அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் 3ஆம் தவணையின் முதலாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் இன்றுடன் நிறைவடைகின்றன. 

முஸ்லிம் பாடசாலைகளுக்கான கற்றல் செயற்பாடுகள் அடுத்த மாதம் 02 ஆம் திகதி நிறைவடையவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 

அனைத்து பாடசாலைகளுக்குமான 03 ஆம்  தவணையின் 02 ஆம் கட்ட கற்றல் செயற்பாடுகள் அடுத்த மாதம் 07 ஆம் திகதி ஆரம்பமாகி டிசம்பர் 04 ஆம் திகதி நிறைவடையவுள்ளதாக கல்வி அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை, இந்த வருடத்திற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை 2,723 பரீட்சை மத்திய நிலையங்களில் எதிர்வரும் 09 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், இந்த வருடத்திற்கான கல்வி பொதுத் தராதர உயர்தரப்பரீட்சை எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் அடுத்த மாதம் 05 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. 

இதேவேளை, பரீட்சைகள் ஆரம்பமாக முன்னர் பாடசாலைகளில் நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டங்களை முன்னெடுக்க சுகாதார வைத்திய அதிகாரிகள் அலுவலகங்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் சமூக வைத்திய நிபுணர் பிரஷீலா சமரவீர தெரிவித்தார்.