.webp)
-558570.jpg)
Colombo (News 1st) 19,592 மெற்றிக் தொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது.
கடந்த 3 வார காலப்பகுதியில் இந்த நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக சபை குறிப்பிட்டுள்ளது.
முல்லைத்தீவு, வவுனியா, கிளிநொச்சி, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, அனுராதபுரம், ஹம்பாந்தோட்டை, குருநாகல், மாத்தளை, மொனராகலை மற்றும் இரத்தினபுரி ஆகிய பகுதிகளில் நெற்கொள்வனவு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
71 நெற்கொள்வனவு நிலையங்கள் ஊடாக இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் மஞ்சுள பின்னலந்த தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தினால் நாட்டரிசி நெல் ஒரு கிலோகிராம் 120 ரூபாவிற்கும், சம்பா அரிசி நெல் ஒரு கிலோகிராம் 130 ரூபாவிற்கும், கீரி சம்பா நெல் 1 கிலோகிராம் 140 ரூபாவிற்கும் கொள்வனவு செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
