.webp)
-558561.jpg)
Colombo (News 1st) சட்டவிரோதமாக நாட்டின் கடற்பரப்பிற்குள் நுழைந்த இந்திய மீன்பிடி படகொன்று நெடுந்தீவு கடற்பரப்பில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த படகில் 11 இந்திய மீனவர்கள் இருந்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்தது.
அவர்களில் 5 பேர் நெடுந்தீவு தீவிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
ஏனைய 6 மீனவர்களையும் கரைக்குக் கொண்டுவர கடற்படையினரின் மீட்புப்பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டன.
இந்திய மீனவர்கள் பயணித்த படகு சட்டவிரோதமாக நாட்டின் கடற்பரப்பிற்குள் நுழைந்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போதே நேற்று (06) காலை விபத்துக்குள்ளானது.
