கண்டி, நுவரெலியா பாடசாலைகளுக்கு விடுமுறை

கண்டி, நுவரெலியா மாவட்ட பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை

by Staff Writer 04-08-2026 | 9:05 AM

Colombo (News 1st) நிலவும் மழையுடனான வானிலையால் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று(04) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

மத்திய மாகாண பிரதம செயலாளரின் அறிவுறுத்தலின் பேரில் குறித்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இதனிடையே, மழையுடனான வானிலையால் பேராதனை பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகளை மறு அறிவித்தல் வழங்கப்படும் வரை தற்காலிகமாக இடைநிறுத்த நேற்று(03) தீர்மானிக்கப்பட்டது.

இந்நிலையில், தமது சொந்த இடங்களுக்கு செல்லும் மாணவர்கள், பாதுகாப்பாக செல்லுமாறு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர், பேராசிரியர் டெரன்ஸ் மதுஜித் மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

ஏனைய மாணவர்கள் பல்கலைக்கழக விடுதிகளில் தங்க முடியுமெனவும் அவர் தெரிவித்தார்.