மஹர சிறையை அண்மித்து ஊரடங்கு சட்டம் நீக்கம்

மஹர சிறைச்சாலையை அண்மித்து அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் நீக்கம்

by Staff Writer 02-08-2026 | 4:52 PM

Colombo (News 1st) மஹர சிறைச்சாலையை அண்மித்த 03 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

246 கெந்தலியத்த பாலுவ - மேற்கு, 246/சி கெந்தலியத்த பாலுவ - வடக்கு மற்றும் 181/ஜி தம்புவ ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலேயே ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தது.

மஹர சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையில் ஏற்பட்ட அமைதியின்மையை தொடர்ந்து, நேற்றிரவு(01) குறித்த கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.