பொதுநலவாய போட்டியில் ருமேஷ் தரங்கவுக்கு தங்கம்

பொதுநலவாய விளையாட்டு விழாவில் ஈட்டி எறிதலில் தங்கப்பதக்கம் வென்று வரலாறு படைத்த ருமேஷ் தரங்க

by Staff Writer 01-08-2026 | 8:15 AM

Colombo (News 1st) 20 ஆண்டுகளுக்குப் பின்னர் பொதுநலவாய விளையாட்டு விழாவில் இலங்கை சார்பில் ருமேஷ் தரங்க தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்.

இன்று (01) அதிகாலை நடைபெற்ற ஆடவருக்கான ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் 89.75 மீற்றர் தூரத்தைப் பதிவு செய்து அவர் இந்தச் சாதனையை நிகழ்த்தினார்.

இதன்படி இம்முறை பொதுநலவாய விளையாட்டு விழாவில் இலங்கை பெற்றுக்கொண்ட முதலாவது தங்கப் பதக்கம் இதுவாகும். 

2006 - பழுதூக்கல் வீரர் சிந்தன கீதால் விதானகே இலங்கைக்காக தங்கப்பதக்கத்தினை வென்ற பின்னர் பொதுநலவாய விளையாட்டு விழாவில் இலங்கைக்கு தங்கப்பதக்கம் கிடைத்த முதல் சந்தர்ப்பம்  இதுவாகும். 

இதேவேளை, பொதுநலவாய விளையாட்டு விழாவில் ஈட்டி எறிதல் போட்டியில் இலங்கை தங்கப்பதக்கம் வென்ற முதலாவது சந்தர்ப்பமும் இதுவாகும். 

ருமேஷ் தரங்க உலக ஈட்டி எறிதல் வீரர்கள் தரவரிசையில் 2 ஆம் இடத்தில் இருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.