.webp)
-558169.jpg)
Colombo (News 1st) எதிர்வரும் நாட்களில் மின்வெட்டை அமுல்படுத்துவதற்கான அபாயம் இதுவரை அவதானிக்கப்படவில்லை என தேசிய கட்டமைப்பு முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் மாதங்களில் மின் உற்பத்தி மற்றும் வலுசக்தி கட்டமைப்பின் ஸ்திரத்தன்மையை முன்னெடுத்துச் செல்வது தொடர்பிலான விசேட கலந்துரையாடலொன்று ஜனாதிபதி தலைமையில் இன்று (31) இடம்பெறவுள்ளதாக நிலையத்தின் பணிப்பாளர் புத்திக சஞ்ஜீவ சமரசிங்க கூறினார்.
வலுசக்தி விநியோகம் மற்றும் முகாமைத்துவ செயற்பாடுகளுடன் தொடர்புடைய அதிகாரிகள் இந்த கலந்துரையாடலுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கை மின்சார சபை மறுசீரமைக்கப்பட்ட பின்னர் தேசிய மின் கட்டமைப்பின் செயற்பாட்டு நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்லும் பொறுப்பு தேசிய கட்டமைப்பு முகாமைத்துவ நிலையத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
