மகாவலி பெரும்போகம் முன்கூட்டியே ஆரம்பம்

பெரும்போகச் செய்கையை முன்கூட்டியே ஆரம்பிக்கத் திட்டம்

by Staff Writer 31-07-2026 | 10:31 AM

Colombo (News 1st) எதிர்வரும் பெரும்போகத்தை உரிய காலத்திற்கு முன்னதாகவே ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக மகாவலி அதிகார சபை தெரிவிக்கின்றது. 

மகாவலி நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் தற்போது 50 வீதம் வரை வீழ்ச்சியடைந்துள்ளதாக அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் எச்.எம்.ஜே.கே. ஹேரத் கூறியுள்ளார். 

அத்துடன், எதிர்வரும் காலங்களில் எல்-நினோ காலநிலைமையால் அதிக மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்தார். 

இதன் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் மகாவலி அதிகார சபையினால் முகாமைத்துவம் செய்யப்படும் பிரதான நீர்த்தேக்கங்களில் தற்போது காணப்படும் நீரின் அளவு தற்போதைய சிறுபோகச் செய்கை நடவடிக்கைகளை வெற்றிகரமாக நிறைவு செய்வதற்கு போதுமானதாகக் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 

நீர்த்தேக்கங்களில் தற்போதுள்ள நீரை பயன்படுத்தி பெரும்போகச் செய்கை நடவடிக்கைகளை விரைவாக ஆரம்பிப்பதன் ஊடாக, நீர் வற்றிய நிலையிலுள்ள நீர்த்தேக்கங்களை மீண்டும் முழுமையாக நிரப்பிக்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டார். 

அடுத்த சிறுபோகத்திற்கும் தடையின்றி நீரை விநியோகிக்க கூடியதாக இருக்குமென மகாவலி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் எச்.எம்.ஜே.கே. ஹேரத் மேலும் தெரிவித்துள்ளார்.