கடலில் மிதந்து வரும் பிளாஸ்டிக் பொருட்கள்

இலங்கை கடற்கரையோரங்களில் குவியும் இந்திய பிளயாஸ்டிக் உற்பத்திப் பொருட்கள்

by Staff Writer 30-07-2026 | 8:52 AM

Colombo (News 1st) கடந்த 2 நாட்களில் இந்தியாவிலிருந்து கடற்பரப்பின் ஊடாக நாட்டிற்கு பிளாஸ்டிக் வந்தடைவது அதிகரித்துள்ளதாக சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. 

கடலில் மூழ்கிய எல்சா 3 கப்பலில் இருந்த பிளாஸ்டிக் உற்பத்திக்காகப் பயன்படுத்தப்படும் பொருட்கள் அடங்கிய மற்றுமொரு கொள்கலன் திறக்கப்பட்டிருக்கலாம் என அனுமானிப்பதாக அதிகார சபையின் தலைவர் சமந்த குணசேகர குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் வடக்கு, வடமேல் மற்றும் மேல் மாகாண கடற்பரப்புகளிலேயே நேற்றும் நேற்றுமுன்தினமும் பிளாஸ்டிக் உற்பத்திக்காகப் பயன்படுத்தப்படும் பொருட்கள் அதிகளவில் வந்தடைந்துள்ளன. 

குறித்த சம்பவம் தொடர்பில் எல்சா 3 கப்பலின் தாய் நிறுவனத்திற்கு அறிவிக்கப்படவுள்ளதாக சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.