.webp)
-558066.jpg)
Colombo (News 1st) மேலும் 104 மெட்ரோ பஸ்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.
குறித்த பஸ்கள், கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளை தொடர்புபடுத்தும் 9 வழித்தடங்களில் சேவையில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளதாக மெட்ரோ பஸ் நிறுவனத்தின் தலைவர் யூ.பீ.திலகரத்ன தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்களுக்கு அதிக வசதிகளுடன் கூடிய பயணிகள் போக்குவரத்து சேவையை வழங்கும் நோக்கில் இந்த அதிசொகுசு பஸ்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
குறித்த பஸ்களை அடுத்த மாத இறுதியிலிருந்து போக்குவரத்து சேவையில் இணைத்துக்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் பஸ்ஸொன்றின் பெறுமதி 420 இலட்சம் ரூபா எனவும் மெட்ரோ பஸ் நிறுவனத்தின் தலைவர் யூ.பீ.திலகரத்ன சுட்டிக்காட்டினார்.
