.webp)
-557913.jpg)
Colombo (News 1st) இலங்கை தமிழ் வம்சாவளி பெண்ணான உமா குமரன் பிரித்தானிய வௌிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவல்கள் இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரித்தானிய பிரதமராக பதவி வகித்த கியர் ஸ்டாமர் பதவி விலகியதை அடுத்து ANDY பேர்ன்ஹாம் புதிய பிரதமாக கடந்த 20 ஆம் திகதி பதவியேற்றார்.
அதன் பின்னர் அமைச்சரவையில் மாற்றங்கள் இடம்பெற்றுவரும் நிலையில் இலங்கையை பூர்வீகமாக கொண்ட உமா குமரன் இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரித்தானியாவில் இராஜாங்க அமைச்சராக இலங்கையை பூர்வீகமாக கொண்ட பெண் நியமிக்கப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகுமென சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
2024ஆம் ஆண்டு பிரித்தானியாவில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தொழில் கட்சி சார்பில் போட்டியிட்டு உமா குமரன் வெற்றி பெற்றிருந்தார்.
சமூக செயற்பாட்டாளராக பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றிய உமா குமரன், கடந்த 17 ஆண்டுகளாக தொழிற்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.
உமா குமரனின் பெற்றோர் இருவரும் இலங்கையை சேர்ந்தவர்கள் என்பதுடன் 1980-களில் நிலவிய உள்நாட்டு போர் காரணமாக அவர்கள் பிரித்தானியாவில் குடியேறினர்.
