சாந்த பண்டாரவின் மகன் தடுத்து வைப்பு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகனை 24 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

by Staff Writer 22-07-2026 | 2:38 PM

Colombo (News 1st) முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் அனுத தினாஜித் பண்டாரவை 24 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணைக்குட்படுத்த கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்று (22) அனுமதியளித்தது.

சீன நாட்டவர் ஒருவரிடமிருந்து 2 கோடி ரூபா பணத்தை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இந்தக் குற்றம் தொடர்பான விசாரணைகள் கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த பிரிவு அதிகாரிகள் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக சந்தேகநபரை தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகனுடன் மற்றொரு தொழிலதிபரின் மகன் மற்றும் மேலும் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் மூவரும் நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.