.webp)
-557801.jpg)
Colombo (News 1st) மஸ்கெலியா - நல்லத்தண்ணி, மோகினி நீர்வீழ்ச்சியில் முச்சக்கரவண்டியொன்று வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்ததுடன் விபத்தில் பாடசாலை மாணவர்கள் மூவர் காயமடைந்தனர்.
நல்லத்தண்ணி பகுதியைச் சேர்ந்த 26 மற்றும் 46 வயதுடைய இருவரே உயிரிழந்தனர்.
காயமடைந்தவர்கள் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக ஹட்டன் டிக்கோயா வைத்தியசாலைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.
12 மற்றும் 15 வயதுடைய மாணவர்களை பாடசாலைக்கு அழைத்துச் செல்லும் போதே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
