மண்ணெண்ணெய் பயன்பாடு: பஸ்களின் எரிபொருள் மாதிரிகள்

டீசலுக்கு பதில் மண்ணெண்ணெய் : பஸ்களின் எரிபொருள் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைப்பு

by Staff Writer 20-07-2026 | 9:11 AM

Colombo (News 1st) மண்ணெண்ணெய்யைப் பயன்படுத்தி போக்குவரத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் சில பஸ்களின் எரிபொருள் மாதிரிகள், இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வாகன போக்குவரத்து மற்றும் வீதி பாதுகாப்பு மாவட்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் டபிள்யூ.பீ.ஜே.சேனாதீர தெரிவித்துள்ளார்.

மாதிரிகள் பகுப்பாய்வு அறிக்கைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மாஅதிபர் கூறினார்.

டீசலுக்கு பதிலாக மண்ணெண்ணெய்யில் இயங்கும் பஸ்களைக் கண்டறியும் நோக்கில் தொடர்ந்தும் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.