.webp)

Colombo (News 1st) முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் சகோதரரான சரத் வீரவன்ச எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினரால் கம்பஹாவில் இன்று(15) அவர் கைது செய்யப்பட்டார்.
அரச பொறியியலாளர் கூட்டுத்தாபனத்தின் வாகனங்களை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
