பஸ் கட்டண அதிகரிப்பு

பஸ் கட்டண அதிகரிப்பு

by Chandrasekaram Chandravadani 01-07-2026 | 5:14 PM

Colombo (news 1st) எதிர்வரும் 06ஆம் திகதி முதல் பஸ் கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.

சாதாரண பஸ்களில் 100 கிலோமீட்டருக்கும் குறைவான தூரத்திற்கு 12 வீதத்தினாலும்
100 கிலோமீட்டருக்கும் அதிக தூரத்திற்கு 20 வீதத்தினாலும் அதிகரிக்கப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிராண்டா தெரிவித்தார்.

சொகுசு பஸ்களில் 100 கிலோமீட்டருக்கும் குறைவான தூரத்திற்கு 12 வீதத்தினாலும்
100 கிலோமீட்டருக்கும் அதிக தூரத்திற்கு 15 வீதத்தினாலும் அதிகரிக்கப்படவுள்ளது.