நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு ஆலோசனை

எல்நினோ நிலைமையால் நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு விவசாயிகளுக்கு ஆலோசனை

by Staff Writer 11-06-2026 | 7:50 AM

Colombo (News 1st) எல்நினோ நிலைமை காரணமாக, நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு விவசாய திணைக்களம் விவசாயிகளை  அறிவுறுத்தியுள்ளது.

குறுகிய கால அறுவடை பயிர்களை பயிரிடுமாறு விவசாய பணிப்பாளர் நாயகம் துஷார விக்ரமாரச்சி ஆலோசனை வழங்கியுள்ளார்.

நீரை சேமிக்கும் நடவடிக்கைகள் குறித்து விவசாயிகளுக்கு ஏற்கெனவெ ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

எல்நினோ நிலைமை 07 முதல் 11 மாதங்கள் வரை நீடிக்கும் சாத்தியமுள்ளதால், எதிர்வரும் பெரும்போக அறுவடை நிறைவடைந்ததும் நிலத்திலுள்ள ஈரப்பதத்தை கொண்டு அடுத்த போகத்திற்கு தயாரானால் நீரை சேமித்துக்கொள்ள முடியுமென விவசாய பணிப்பாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.