.webp)

Colombo (News 1st) வரையறுக்கப்பட்ட சிலோன் பிஸ்கட் நிறுவனத்தின்(CBL) தலைவர் ரம்ய சனத் அமரவீர விக்கிரமசிங்க தனது 79ஆவது வயதில் காலமானார்.
1930-களில் வில்லியம்ஸ் கொன்பெசக்ஸனரி நிறுவனத்தை ஆரம்பித்த சைமன் ஆர்தர் விக்கிரமசிங்கவின் இளைய மகனான ரம்ய விக்கிரமசிங்க, 1961ஆம் ஆண்டில் தனது தந்தையின் மறைவின் பின்னர் தனது 03 சகோதரர்களுடன் இணைந்து வணிகத்தின் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு CBL Group நிறுவனத்திற்கு அடித்தளம் அமைத்தார்.
நிபுணத்துவ உணவு தொழில்நுட்பவியலாளரான விக்கிரமசிங்க, தயாரிப்புகளின் ஊட்டச்சத்து மதிப்பு மற்றும் தரத்தை மேம்படுத்துவதற்காக ஆற்றிய சேவை அளப்பரியது.
நீண்ட காலம் நிறுவனத்தின் துணை தலைவராகப் பணியாற்றிய அவர், 2015ஆம் ஆண்டில் CBL Group நிறுவனத்தின் தலைவராகப் பொறுப்பேற்றார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை(08) மாலை 6 மணிக்கு கல்கிசை பொது மயானத்தில் நடைபெறவுள்ளன.
