கோட்டாபய ராஜபக்ஸவிற்கு வௌிநாட்டு பயணத்தடை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைக்களுக்கமைய கோட்டாபய ராஜபக்ஸவிற்கு வௌிநாட்டு பயணத்தடை

by Staff Writer 03-06-2026 | 3:22 PM

Colombo (News 1st) உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் நடவடிக்கையாக முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஸவிற்கு வௌிநாட்டு பயணத்தடை விதித்து கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று(03) உத்தரவிட்டுள்ளது.

குற்றப் புலனாய்வு திணைக்களம் தாக்கல் செய்த நகர்த்தல் பத்திரத்தை பரிசீலித்ததன் பின்னர், கோட்டாபய ராஜபக்ஸவிற்கு  மேலதிகமாக இராணுவ அதிகாரிகள் இருவருக்கும் வௌிநாட்டு பயணத்தடை விதித்து நீதவான் பசன் அமரசேன உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இராணுவத்தின் கேர்ணல் மொஹமட் அன்சார் மற்றும் இராணுவத்தின் முன்னாள் புலனாய்வு பிரிவின் அதிகாரியான சில்வா என அழைக்கப்படும் பிரேமாநந்த உதலாகம ஆகியோருக்கு வௌிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த விசாரணைகளுக்காகவே முன்னாள் அரச புலனாய்வு பிரிவின் பிரதானி, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.