.webp)
-556506.jpg)
Colombo (News 1st) பொலிவூட் சினிமாவின் பிரபல பாடகரான ஆதித்யா நாராயண் இன்று(27) காலை நாட்டிற்கு வருகை தந்துள்ளார்.
ஆதித்யா நாராயணுக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அமோக வரவேற்பளிக்கப்பட்டது.
பிரபல பொலிவூட் பாடகர் உதித் நாராயணின் மகனான ஆதித்யா நாராயண், மக்களின் அமோக ஆதரவை பெற்ற பல பாடல்களுக்கு சொந்தக்காரராவார்.
அவர் இந்தியாவில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் புகழ் பெற்றவராவார்.
ஆதித்யா நாராயண் எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதி ஹேவ்லொக்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ள விசேட இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளார்.
