பசிலை கைது செய்யுமாறு நீதிமன்றம் பிடியாணை உத்தரவு

பசில் ராஜபக்ஸவை கைது செய்யுமாறு மாத்தறை நீதவான நீதிமன்றம் பிடியாணை உத்தரவு

by Staff Writer 22-05-2026 | 6:38 PM

Colombo (News 1st) பிரவுன் ஹில்ஸ் வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸவை கைது செய்யுமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் இன்று(22) பிடியாணை பிறப்பித்தது.

இது தொடர்பான வழக்கு மாத்தறை நீதவான் சதுர திசாநாயக்க முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது பசில் ராஜபக்ஸ சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் அவரது உடல்நிலை குறித்த விபரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.

எனினும், குறித்த விடயங்களை நிராகரித்த நீதவான் அவரை கைது செய்வதற்கான பிடியாணை உத்தரவை பிறப்பித்தார்.

முறைகேடாக ஈட்டப்பட்ட பணத்தை பயன்படுத்தி மாத்தறை பிரவுன் ஹில்ஸ் பகுதியில் காணி ஒன்றை கொள்வனவு செய்த சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ, அவரது மனைவியின் சகோதரியான அயோமா கலப்பத்தி மற்றும் அவரது கணவரான திஸ்ஸ கலப்பத்தி உள்ளிட்டோருக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.