கேகாலையில் அதிகூடிய மழை வீழ்ச்சி

கேகாலை மாவட்டத்தில் அதிகூடிய மழை வீழ்ச்சி

by Staff Writer 22-05-2026 | 6:50 PM

Colombo (News 1st) நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகூடிய மழைவீழ்ச்சி கேகாலை மாவட்டத்தின் பம்பேகம பகுதியில் பதிவாகியுள்ளது.

அங்கு 336.5 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

கிரிந்திவெலயில் 332 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் கேகாலை ப்ரென்றித் தோட்டத்தில் 291.5 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் கலட்டுவாவையில் 237 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் சிவப்பு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லம்புகமையில் 224 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் ஹங்வெல்லையில் 216 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் தும்மலசூரியவில் 215.7 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளது.

இதேவேளை, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மாவட்டத்தின் சில இடங்களிலும் 200 மில்லிமீற்றருக்கும் கூடிய பலத்த மழைவீழ்ச்சி இன்று பதிவாகுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் பலத்த மழை தொடர்பான சிவப்பு எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.