.webp)
-556163.jpg)
Colombo (News 1st) தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை உறுதி செய்தது.
நம்பிக்கை தீர்மானம் தொடர்பான வாக்கெடுப்பு சட்டமன்றத்தில் இன்று(13) முன்னெடுக்கப்பட்டது.
இதில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவாக 144 வாக்குகளும் எதிராக 22 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
அத்துடன் திராவிட முன்னேற்ற கழக உறுப்பினர்கள் உள்ளிட்ட 61 பேர் வாக்கெடுப்பில் பங்கேற்காது வௌிநடப்பு செய்தனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி சார்ந்த ஒரு குழு நம்பிக்கை வாக்கெடுப்பில் எதிராக வாக்களித்ததுடன், அதிமுக கட்சியின் சி.வி.சண்முகம் நம்பிக்கை தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்தார்.
05 ஆசனங்களை கொண்டிருந்த பாட்டாலி மக்கள் கட்சி வாக்கெடுப்பில் நடுநிலை வகிப்பதாக அறிவித்தது.
பாஜக சட்டமன்ற உறுப்பினரும் வாக்கெடுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
இந்நிலையில், 233 உறுப்பினர்களை கொண்ட சட்டமன்றத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 144 உறுப்பினர்களை கொண்டு பெரும்பான்மையை உறுதி செய்தது.
தமிழக வெற்றிக் கழகம் 108 ஆசனங்களை தேர்தலில் பெற்றுக்கொண்டதுடன், ஆட்சியமைக்க 118 ஆசனங்கள் உறுதிசெய்யப்பட வேண்டும்.
சில கட்சிகளின் ஆதரவுடன் 120 ஆசனங்களை காட்டி தமிழக முதலமைச்சராக ஜோசப் விஜய் பதவியேற்றார்.
இன்றைய தினத்திற்குள் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கப்பட வேண்டிய கட்டாயம் காணப்பட்டது.
இந்நிலையில், நம்பிக்கை தீர்மானத்தில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றதாக சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவித்தார்.
