.webp)
-615773-556005.jpg)
Colombo (News 1st) சமூக ஊடகங்கள் மூலம் அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டுக்கமைய இராஜாங்கனை சத்தாரதன தேரர் இன்று அதிகாலை சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டார்.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, பொலிஸ் மாஅதிபர் ப்ரியந்த விஜேசூரிய, சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் கித்சிறி ஜயலத் மற்றும் பிரதி அமைச்சர் சுனில் வடகல ஆகியோருக்கு சமூக ஊடகங்களூடாக அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஸ்ராவஸ்திபுரவிலுள்ள விகாரையில் மத்திய குற்ற விசாரணை பணியக அதிகாரிகளினால் தேரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
