.webp)

Colombo (News 1st) கொழும்பை அண்டிய பகுதிகளில் இன்றும்(07) நாளையும்(08) விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வியட்நாம் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ விஜயத்தை முன்னிட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இன்று(07) பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையவுள்ள வியட்நாம் ஜனாதிபதி To Lam, அதிவேக நெடுஞ்சாலை, கிராண்ட்பாஸ், ஒருகொடவத்தை சந்தி, பேஸ்லைன் வீதி, பொரளை சந்தி, டி.எஸ்.சேனாநாயக்க சந்தி, ஹோர்டன் பிளேஸ், தாமரை தடாக சுற்றுவட்டம், ஆனந்த குமாரசுவாமி மாவத்தை, நூலக சந்தி, ஃபிளவர் வீதி சந்தி, லிபர்டி சுற்றுவட்டம், புனித மைக்கல் சுற்றுவட்டம், புனித மைக்கல் வீதி, காலி வீதி, புனித மைக்கல் வீதி சந்தி, காலி வீதி, காலிமுகத் திடல் சுற்றுவட்டம், காலி மத்திய வீதி, பாலதக்ஷ மாவத்தை, என்.எஸ்.ஏ.சுற்றுவட்டம், லோட்டஸ் வீதி, பித்தளை சந்தி மற்றும் யோர்க் வீதி ஊடாக பயணிக்கவுள்ளார்.
இதனிடையே, நாளைய தினம்(08) என்.எஸ்.ஏ.சுற்றுவட்டம், காலி மத்திய வீதி, வங்கி மாவத்தை ஊடாக ஜனாதிபதி செயலகம் வரையான வீதியில் பஸ்கள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் உட்பிரவேசித்தல், வியட்நாம் ஜனாதிபதியின் பயணம் ஆரம்பிக்கப்படுவதற்கு 02 மணித்தியாலங்களுக்கு முன்னதாக நிறுத்தப்பட வேண்டும் என பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
