பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம்

பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம்

by Staff Writer 06-05-2026 | 3:16 PM

Colombo (News 1st) பிரதி பொலிஸ் மாஅதிபர் மூவர் உள்ளிட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் சிலர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியின் கீழ் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

இடமாற்றம் செய்யப்பட்டவர்களில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் 08 பேரும் பொலிஸ் அத்தியட்சகரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பிரதி பொலிஸ் மாஅதிபர் டி.பி.சந்திரசிறி, நுவரெலியா மாவட்டத்திலிருந்து புத்தளம் மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மாஅதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

பிரதி பொலிஸ் மாஅதிபர் ஏ.ஜீ.ஜே.சந்திர குமார பொலிஸ் மேலதிக படை தலைமையகத்திலிருந்து நுவரெலியா மாவட்டத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளார்.

சிறுவர்கள் மற்றும் பெண்கள் மீதான வன்முறை தடுப்பு மற்றும் விசாரணை பணியகத்தில் கடமையாற்றிய பிரதி பொலிஸ் மாஅதிபர் ஆர்.ஏ.டி.குமாரி பொலிஸ் மேலதிக படை தலைமையகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தெல்தெனிய பிரிவிற்கு பொறுப்பாகவிருந்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.பீ.பி.சமரபால மேல் மாகாண புலனாய்வு விசாரணை பிரிவின் பணிப்பாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.