எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

by Staff Writer 02-05-2026 | 10:19 PM

Colombo (News 1st) இன்று(02) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுதாபனம் தெரிவித்துள்ளது.

ஒக்டேன் 95 ரக பெட்ரோல் விலை 15 ரூபாவினாலும் (புதிய விலை 470 ரூபா)
ஒக்டேன் 92 ரக பெட்ரோல் விலை 12 ரூபாவினாலும் (புதிய விலை 410 ரூபா)
சுப்பர் டீசல் விலை 15 ரூபாவினாலும் (புதிய விலை 458 ரூபா)
டீசல் விலை 10 ரூபாவினாலும் (புதிய விலை 392 ரூபா)
மண்ணெண்ணெய் விலை 10 ரூபாவினாலும் (புதிய விலை 265 ரூபா) அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் ஒக்டேன் 92 பெட்ரோல் மற்றும் ஒட்டோ டீசல் விலைகளுக்கு அமைய தமது விலைகளையும் பேணுவதாக லங்கா இந்தியன் ஒயில் நிறுவனம் அறிவித்துள்ளது.