சைபர் பாதுகாப்பு ஒழுங்குபடுத்தலுக்கு அனுமதி

தேசிய சைபர் பாதுகாப்பு ஒழுங்குபடுத்தல் அதிகார சபையை நிறுவுவதற்கான சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி - டிஜிட்டல் பொருளாதார அமைச்சு

by Staff Writer 30-04-2026 | 6:46 AM

Colombo (News 1st) தேசிய சைபர் பாதுகாப்பு ஒழுங்குபடுத்தல் அதிகார சபையை நிறுவுவதற்கான சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

டிஜிட்டல் பொருளாதார அமைச்சு மற்றும் கணினி அவசர தயார்நிலை குழு ஆகியவற்றுடன் இணைந்து, சட்ட வரைஞர் திணைக்களத்தின் ஆலோசனைகளைப் பெற்று வருவதாக அமைச்சின் செயலாளர் வருண ஸ்ரீ தனபால குறிப்பிட்டார்.

எதிர்வரும் 03 மாதங்களில் இந்த சட்டமூலத்தை பாராளமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்றுவதற்கு எதிர்பார்ப்பதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளர் வருண ஸ்ரீ தனபால தெரிவித்தார்.