கைதி உயிரிழப்பு : உள்ளக விசாரணை ஆரம்பம்

கொழும்பு மெகசின் சிறைச்சாலை கைதி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் உள்ளக விசாரணை ஆரம்பம்

by Staff Writer 30-04-2026 | 1:44 PM

Colombo (News 1st) கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் கைதி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் உள்ளக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சிறைச்சாலை உதவி அத்தியட்சகர் தலைமையில் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

சம்பவம் தொடர்பாக சிறைச்சாலை காவலரும் 04 கட்டுப்பாட்டாளர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

நேற்று(29) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட 02 கட்டுப்பாட்டாளர்களை எதிர்வரும் 07ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.

சம்பவம் தொடர்பாக இதற்கு முன்னதாக கைது செய்யப்பட்ட சிறைச்சாலை காவலர் மற்றும் ஏனைய 02 கட்டுப்பாட்டாளர்களும் எதிர்வரும் 06ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பொலிஸ் மாஅதிபரின் உத்தரவிற்கமைய கொழும்பு மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மாஅதிபரின் கண்காணிப்பின் கீழ் பொரளை பொலிஸார், கொழும்பு குற்ற விசாரணை பிரிவு மற்றும் கொழும்பு தெற்கு குற்ற விசாணை பிரிவினராலும் மேலதிக விசாணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நவகம்புர பகுதியை சேர்ந்த 37 வயதுடைய கைதியே உயிரிழந்துள்ளதுடன், அவர் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டிற்காக  விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் கூறினர்.