அகரவிட்ட மாணவர்களின் கனவை நனவாக்கிய கம்மெத்த

by Chandrasekaram Chandravadani 30-04-2026 | 1:57 PM

Colombo (News 1st) நாட்டை கட்டியெழுப்பும் மக்கள் அரண் - கம்மெத்தவின் மற்றுமொரு செயற்றிட்டம் மாணவர்களிடம் இன்று(30) கையளிக்கப்பட்டது.

கொஸ்கம, சாலாவ, அகரவிட்ட மகா வித்தியாலயத்தின் சுகாதார கட்டமைப்பு மற்றும் நூலகம் ஆகியன புனரமைக்கப்பட்டு கையளிக்கப்பட்டன.

கொழும்பு - சீதாவக்கை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கொஸ்கம, சாலாவ பகுதியில் அமைந்துள்ள அகரவிட்ட மகா வித்தியாலயத்தில் தரம் 1 முதல் 9 வரை 150 மாணவர்கள் கல்வி கற்கின்றனர்.

பாடசாலையில் நிலவும் பல்வேறு குறைபாடுகளுக்கு மத்தியிலேயே இம்மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர்.

குறைந்தளவான வசதிகளுடன் காணப்படும் நூலகம் தொடர்பில் பாடசாலையின் அதிபர் கம்மெத்தவின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

அதற்கமைய, பாடசாலையின் நூலகம் மற்றும் சுகாதாரக் கட்டமைப்பை புனரமைக்க கம்மெத்த முன்வந்தது.

இதற்கான நிதிப் பங்களிப்பை​ நவலோக உயர்கல்வி நிறுவனம் வழங்கியது.

புனரமைக்கப்பட்ட நூலகம் மற்றும் சுகாதாரக் கட்டமைப்பு மாணவர்களின் பாவனைக்காக இன்று(30) கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் MBC பிரதம செயற்பாட்டு அதிகாரி புத்தி விக்கிரமநாயக்க, நவலோக உயர்கல்வி நிறுவனத்தின் உதவி பொது முகாமையாளர் திலினி குணதிலக்க, ஹோமாகம கல்வி வலயத்தின் நூலக மற்றும் அழகியல் பணிப்பாளர் கபில மெத்தேகொட உள்ளிட்ட அரச அதிகாரிகள், கம்மெத்த பொதுச் செயலாளர் பிரசன்ன அத்துகோரள உள்ளிட்ட குழுவினர் கலந்துகொண்டனர்.

மாணவர்களின் உள்ளங்களில் அறிவின் தீபத்தை ஏற்றி, நாளைய உலகை வெற்றிகரமாக எதிர்கொள்ளும் ஆற்றலை வளர்க்கும் உயரிய பணியை கம்மெத்த விடாமுயற்சியுடனும் அர்ப்பணிப்புடனும் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது.