AL விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நிறைவு

AL விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் இன்று(24) நள்ளிரவுடன் நிறைவு

by Staff Writer 24-04-2026 | 11:35 AM

Colombo (News 1st) கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் இன்று(24) நள்ளிரவுடன் நிறைவடைகின்றது.

விண்ணப்பங்களை இணையவழி(Online) ஊடாக மாத்திரமே சமர்ப்பிக்க வேண்டும் என பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.

விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் எந்தவொரு காரணத்திற்காகவும் நீடிக்கப்பட மாட்டாது என திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ள 011 278 5922 அல்லது 011 278 4208 அல்லது 011 278 4537 ஆகிய தொலைபேசி இலக்கங்களை தொடர்புகொள்ளுமாறு பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.