கரந்தெனிய ராஜூ 72 மணித்தியாலங்கள் தடுப்புக்காவலில்

கரந்தெனிய ராஜூவை 72 மணித்தியாலங்கள் தடுப்புக்காவலில் விசாரிக்க அனுமதி

by Staff Writer 18-04-2026 | 8:34 PM

Colombo (News 1st) திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுவின் உறுப்பினரான கரந்தெனிய ராஜூ என அழைக்கப்படும் சோபனாஹந்தி சனத் டி சில்வாவை 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து  விசாரணைக்குட்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்திய பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட கரந்தெனிய ராஜூ நேற்றிரவு(17) நாட்டிற்கு அழைத்து வரப்பட்டார். து

பாயிலிருந்து இந்தியாவுக்கு வருகை தந்து புதுடில்லியில் தங்கியிருந்த போது அவர் இந்திய பாதுகாப்பு பிரிவினரால் அண்மையில் கைது செய்யப்பட்டார்.

சர்வதேச பொலிஸாரிடம் குற்றப் புலனாய்வு திணைக்களம் விடுத்த கோரிக்கைக்கு அமைய அவர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட கரந்தெனிய ராஜூ திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுவின் தலைவர்களில் ஒருவரான கரந்தெனிய சுத்தாவின் சகோதரர் ஆவார்.

கொலைகள், ஆயுதக் கடத்தல் உள்ளிட்ட பல  பாரதூரமான குற்றங்கள் தொடர்பில் அவருக்கெதிராகக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மீட்டியாகொட, கரந்தெனிய, எல்பிட்டி மற்றும் காலி ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற குற்றச் சம்பங்களுடன் கரந்தெனிய ராஜூ தொடர்புபட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.