இலங்கை நிலக்கரி நிறுவனத்திற்கு தொடர்ந்தும் சீல்

இலங்கை நிலக்கரி நிறுவனத்திற்கு தொடர்ந்தும் சீல்

by Staff Writer 16-04-2026 | 7:51 AM

Colombo (News 1st) இலங்கை நிலக்கரி நிறுவனம் தொடர்ந்தும் சீல் வைக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

அன்றாட அத்தியாவசிய பணிகளுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகள் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முழுமையான மேற்பார்வையின் கீழ் முன்னெடுக்கப்படுகின்றன.

கடந்த 11ஆம் திகதி இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் அலுவலகத்திற்கு சீல் வைப்பதற்கு குற்றப் புலனாய்வு திணைக்களம் நடவடிக்கை எடுத்திருந்தது.

2009 முதல் நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டமை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி செயலாளர் நந்திக சனத் குமாநாயக்க, குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் செய்த முறைப்பாட்டிற்கு அமைய ஆரம்பிக்கப்பட்டுள்ள விசாரணைகளின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் அலுவலகத்திற்கு 24 மணித்தியாலங்களும் பாதுகாப்பு வழங்குவதற்காக 04 பொலிஸ் உத்தியோகத்தர்களும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் 02 அதிகாரிகளும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.