.webp)

Colombo (News 1st) வறட்சியான வானிலையில் இன்று(02) முதல் மாற்றம் ஏற்படலாமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இன்று முதல் எதிர்வரும் 06ஆம் திகதி வரை மழையுடனான வானிலை நிலவுமென எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களத்தின் எதிர்வுகூறல் பிரிவின் பணிப்பாளர் மெரில் மெண்டிஸ் குறிப்பிட்டார்.
நாட்டின் பல பகுதிகளிலும் மாலை வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு ஏதுவான சூழ்நிலைகள் காணப்படுவதாக அவர் கூறினார்.
மேல், சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா, வட மேல், வட மத்திய மாகாணங்களில் இன்று பிற்பகல் 02 மணிக்கு பின்னர் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுனெ மெரில் மெண்டிஸ் தெரிவித்தார்.
சில பகுதிகளில் 50 முதல் 75 மில்லிமீட்டர் வரையான பலத்த மழை பெய்யக்கூடுமென எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
