.webp)
-552614.jpg)
Colombo (News 1st) மட்டக்குளி - கெமுனுபுர பகுதியில் கூரிய ஆயுதத்தினால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இருதரப்பினரிடையே ஏற்பட்ட முரண்பாட்டை தொடர்ந்து குறித்த நபரின் வீட்டிற்கு சென்ற சிலர் கூரிய ஆயுதத்தினால் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் பலத்த காயமடைந்தவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் கூறினர்.
மட்டக்குளி பகுதியை சேர்ந்த 40 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.
சந்தேகநபர்களை கைது செய்வதற்கான மேலதிக நடவடிக்கைகளை மட்டக்குளி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
