.webp)

Colombo (News 1st) 2025 கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் நேற்றிரவு(31) வௌியாகின.
www.doenets.lk எனும் இணையத்தளத்திற்கு பிரவேசிப்பதன் மூலம் பெறுபேறுகளை பார்வையிட முடியும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
இம்முறை உயர்தர பரீட்சையில் 281,810 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர்.
இவர்களில் 221,413 பேர் பாடசாலை பரீட்சார்த்திகள் என்பதுடன் 60,397 பேர் தனிப்பட்ட பரீட்சாத்திகளாவர்.
பரீட்சையில் தோற்றிய பரீட்சார்த்திகளில் 62.64 வீதமானோர் பல்கலைக்கழகத்திற்கு தகுதி பெற்றுள்ளதாக பரீட்சை திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
பெறுபேறுகளை மீள்பரிசீலனை செய்வதற்கான இணையவழி விண்ணப்பங்கள் எதிர்வரும் 06ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படுமென திணைக்களம் தெரிவித்துள்ளது.
