.webp)

Colombo (News1st) SEA OF SRI LANKA இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 07 மீனவர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்ப்படுத்தப்பட்ட போது, அவர்களை எதிர்வரும் ஏப்ரல் 09ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
நேற்றிரவு முன்னெடுக்கப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது, யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் குறித்த 07 மீனவர்களும் இருவேறு சந்தர்ப்பங்களில் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டனர்.
இதேவேளை, SEA OF SRI LANKA இலங்கை கடற்பரப்பில் கடந்த மாதம் 19ஆம் திகதி அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 2 படகுகளுடன் கைதுசெய்யப்பட்ட 10 மீனவர்களும் 12 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 10 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.
மன்னார் மாவட்ட மேலதிக மாவட்ட நீதிபதி M.M.F.ஸிஹாரா முன்னிலையில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அத்துடன், ஒவ்வொரு மீனவர்களுக்கும் தலா 250,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
வழக்கின் சான்றுப் பொருட்களை அரசுடமையாக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
