சுரேஷ் சலே ஏப்ரல் 22ஆம் திகதி விளக்கமறியலில்

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே ஏப்ரல் 22ஆம் திகதி விளக்கமறியலில்

by Staff Writer 26-03-2026 | 7:48 PM

Colombo (News1st) அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலேவை அடுத்த மாதம் 22ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் இசுறு நெத்திக்குமார இன்று உத்தரவிட்டார்.

குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அவர் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்ட சுரேஷ் சலே தற்போது குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரின் தடுப்புக்காவலில் உள்ளார்.

பக்கச்சார்பின்றிய விசாரணைகளை முன்னெடுப்பதற்காக இந்த விசாரணைகளை குற்றப்புலனாய்வு திணைக்களத்திடமிருந்து வேறொரு விசாரணைக் குழுவிடம் ஒப்படைக்குமாறு சுரேஷ் சலே சார்பில் ஆஜரான சட்டத்தரணி அசித் சிறிவர்தனவினால் மன்றில் இன்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

எனினும், இந்தக் கோரிக்கையை கொழும்பு கோட்டை நீதவான் இசுறு நெத்திக்குமார நிராகரித்தார்.