''இலங்கைக்கு எரிபொருள் வழங்க தயார்''

இலங்கைக்கு தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எரிபொருள் வழங்க தயார் - இலங்கைக்கான ஈரானிய தூதுவர்

by Staff Writer 23-03-2026 | 6:42 PM

Colombo (News 1st) இலங்கைக்கு தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எரிபொருள் வழங்குவதற்கு தயாராகவுள்ளதாக இலங்கைக்கான ஈரானிய தூதுவர் Alireza Delkhosh தெரிவித்தார்.

கொழும்பில் இன்று(23) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வௌியிட்ட போதே அவர் இதனை கூறினார்.

இலங்கை ஈரானின் மிக நெருங்கிய நண்பரென Alireza Delkhosh இதன்போது சுட்டிக்காட்டினார்.