ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் நாட்டிற்கு வருகை

ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் Masato Kanda நாட்டிற்கு வருகை

by Staff Writer 23-03-2026 | 3:28 PM

Colombo (News 1st) ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் Masato Kanda இன்று(23) நாட்டிற்கு வருகை தந்துள்ளார்.

Masato Kanda கொழும்பு துறைமுக வளாகத்தில் கண்காணப்பில் ஈடுபட்டார்.

இதனை தொடர்ந்து தனியார் துறை பிரதிநிதிகளுடன் விசேட மதிய நேர விருந்துபசாரத்திலும் கலந்துகொண்டார்.

அவர் இன்று மாலை ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான வதிவிட செயற்படும் அலுவலகத்தின் வரவேற்பு நிகழ்விலும் அங்குள்ள ஊழியர்களுடனும் சந்திப்பில் ஈடுபடவுள்ளார்.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் Masato Kanda நாளை(24) டித்வா சூறாவளியினால் ஏற்பட்ட சேதங்களை கண்காணிப்பதற்காக கேகாலை நகருக்கு செல்லவுள்ளார்.

அத்துடன் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.