.webp)

COLOMBO (News 1st) - வாகன எரிபொருள் QR குறியீடுகளை பெறுவதிலுள்ள சிக்கல்களை நிவர்த்திப்பதற்காக புதிய அம்சமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட வாகனத்திற்கு எரிபொருள் QR குறியீட்டைப் பெற்றுக்கொள்ளும் போது
பதிவுசெய்ய பயன்படுத்தப்பட்ட தொலைபேசி இலக்கம் பயன்பாட்டில் இல்லாதவர்கள் அதற்கான எரிபொருள் QR குறியீட்டைப் பெறுவதில் எதிர்கொள்ளும் சிரமங்களை தவிர்ப்பதற்காக இந்த புதிய அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பெரும்பாலான சந்தர்ப்பங்களில் வாகனங்களை கொள்வனவு செய்யும் போது அல்லது தொலைபேசி இலக்கத்தை மாற்றும் போது வாடிக்கையாளர்கள் ஏற்கனவே உள்ள பதிவை நீக்கிவிட்டு புதிய பதிவை மேற்கொள்வதில் சிரமங்களை எதிர்கொண்டனர்.
இந்த நிலையில் இந்த புதிய QR முறைமையின் ஊடாக தடைகள் நீக்கப்பட்டு QR குறியீட்டை பெறுவதை இலகுவாக்கியுள்ளது.
இதற்கமைய வாகனத்தின் அடையாளத்தை சரிபார்ப்பதற்கு வாகன இலக்கம் மற்றும் செசிஸ் இலக்கத்தை (Chassis Number) சரியாக உள்ளீடு செய்தால் மாத்திரமே இந்த புதிய அம்சத்தை அணுக முடியும்.
வாகனம் ஏற்கனவே வேறு தொலைபேசி இலக்கத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தாலும் சரியான தகவல்களை உள்ளிடுவதன் ஊடாக அந்த பதிவை இரத்துச் செய்து புதிய தொலைபேசி இலக்கத்தில் பதிவு செய்துகொள்ளலாம்.
இதற்கமைய QR வழங்கும் அமைப்பில் Override எனும் பொத்தானை அழுத்துவதன் ஊடாக அந்த வாகனத்துடன் தொடர்புடைய பழைய கணக்கு மற்றும் தரவுகளை அமைப்பிலிருந்து நீக்கிவிட்டு புதிய தகவல்களுடன் கூடிய ஒரு புதிய கணக்கை நடைமுறைப்படுத்தலாம்.
இந்த நிலையில் இந்த நடைமுறையில் காணப்பட்ட பதிவை நீக்கி முன்னாள் பயனாளரால் அந்த வாகனத்திற்காக பெற்றிருந்த சிறப்புரிமைகளும் அணுகலும் நீக்கப்படும்.
நீண்ட காலமாக வேறு தரப்பினருக்கு சொந்தமாக அல்லது பயன்படுத்தப்படாத தொலைபேசி இலக்கங்களின் கீழ் பதிவுசெய்யப்பட்ட வாகனங்களுக்கான QR குறியீட்டை அந்தந்த வாகனங்களின் உரிமையாளர் தடையின்றி பெறுவதற்கு இந்தப் புதிய அம்சம் வழிவகுக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
