கோட்டாபய ராஜபக்ஸவிடம் வாக்குமூலம் பதிவு

கோட்டாபய ராஜபக்ஸவிடம் வாக்குமூலம் பதிவு

by Staff Writer 17-03-2026 | 3:34 PM

Colombo (News 1st) முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று(17) முற்பகல் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

பல்வேறு தொடர்மாடி வீடுகளை சட்டரீதியற்ற முறையில் சிலருக்கு வழங்கியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகளுக்காக வாக்குமூலம் அளிப்பதற்காக அவர் சென்றிருந்தார்.

குறித்த சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிற்கு ஆணைக்குழுவில் கடந்த பெப்ரவரி 13ஆம் திகதி முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், தாம் சிங்கப்பூர் பயணத்திற்காக காலத்தை ஒதுக்கி தயார்ப்படுத்தியுள்ளதால் வேறு தினத்தை வழங்குமாறு எழுத்து மூலம் கோரிக்கை விடுத்திருந்தார்.

அதற்கமைய, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று வாக்குமூலம் வழங்கிய முன்னாள் ஜனாதிபதி சில மணித்தியாலங்களின் பின்னர் அங்கிருந்து வௌியேறியுள்ளார்.