SLTB டிப்போகளிலிருந்து எரிபொருள் விநியோகம்

SLTB டிப்போகளிலிருந்து எரிபொருள் விநியோகம்

by Staff Writer 16-03-2026 | 4:24 PM

Colombo (News 1st) - இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போக்களின் ஊடாக பயணிகள் பஸ் போக்குவரத்திற்கான எரிபொருள் இன்று (16) முதல் விநியோகிக்கப்படுமென இலங்கை  பெட்ரோலிய கூட்டுத்தாபனம்  தெரிவித்துள்ளது.

போக்குவரத்து மார்க்கம், தூரத்தின் அளவு, சேவை முன்னெடுக்கப்படும் பயணங்களின் எண்ணிக்கைக்கமைய பயணிகள் போக்குவரத்திற்கான பஸ்களுக்கு வழங்கப்படும் எரிபொருள் கோட்டாவில் திருத்தம் மேற்கொள்ளப்படுமென இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் டீ.ஏ.ராஜகருணா தெரிவித்துள்ளார். 

மத்திய கிழக்கு நாடுளில் ஏற்பட்டுள்ள மோதல் நிலைமையின் காரணமாக எரிபொருள் கிடைப்பதில் சில சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சாதாரண முறையில் எரிபொருளை பெறுவோர், கறுப்பு சந்தை வர்த்தக நடவடிக்கைகளுக்காக எரிபொருளை பெறுவோர் என இரு குழுக்கள் கண்டறிப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த விடயங்களை கருத்திற்கொண்டே அரசாங்கத்தினால் QR முறைமை அறிமுகப்படுத்தப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

அனைத்து அம்பியூலன்ஸ்களுக்கும் விசேட பிரிவின் கீழ் எரிபொருள் வழங்கப்படுமென இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

டிப்போக்கள் மற்றும் எரிபொருள் நிரப்பு நிலையங்களிலிருந்து அம்பியூலன்ஸ்கள் எரிபொருளை பெற முடியுமென அதன் பணிப்பாளர் நாயகம், கலாநிதி மயுர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார்